


பேரா,தஞ்சோங் ரம்புத்தான் வட்டாத்தில் சுமார் 30 வருடமாக இயங்கி வரும் சங்கீத பரத கலாஞ்சலி நடனப்பள்ளி மாணவர்களின் சலங்கை பூஜை சிறப்புடன் நடைபெற்றது.
ஏழு மாணவிகள் பங்கேற்ற இந்த பரத நாட்டிய சலங்கை பூஜை நிகழ்வு தஞ்சோங் ரம்புத்தான் தேவா ஸ்ரீ முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பள்ளி நடன ஆசிரியை குரு ஸ்ரீமதி உஷா நந்தினி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
நர்மதா குணசீலன்,ஹாசிகா ஜெகன்மோகன்,சாய் கிஷாந்ரா பிரேம் நாதன்,பூவாசினி கைலாசம்,ஜெயமலர் சசிராவ்,கீர்தனா விஜய்,ரெயஷெனி சண்ணாசி,ஆகியோர் சலங்கை பூஜை கண்டதாக நடன ஆசிரியை குரு ஸ்ரீமதி உஷா நந்தினி கூறினார்.
கடந்த 30 வருடமாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் நடனம் பயின்ற மாணவிகளின் 17க்கு மேற்ப்பட்ட அரங்கேற்றம் கண்டதுடன் 30க்கு மேற்பட்ட சலங்கை பூஜையை முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சலங்கை பூஜையைக் காண மாணவிகளின் பெற்றோர்கள்,உறவினர்கள் உட்பட திரளானோர் கலந்துக் கொண்டனர்.

