
குகையில் அமைந்துள்ள மகா ஜல லிங்கேஸ்வர்
ஆலயப் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
குவாந்தான் பஞ்சிங் மகா ஜல லிங்கேஸ்வரர் ஆலயத்தில்
பிரதோஷ சிறப்பு பூஜைகள் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத் தலைவர் கே. பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் இப் பூஜையில் கலந்து கொண்டதாக அவர் சொன்னார். ஆலயங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்து சமூகத்தை மேம்படுத்துவதிலும் மஹிமா தொடர்ந்து கவனம் செலுத்தும்.
அதே வேளையில் ஆலய நிர்வாகங்களும் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வகையில் இந்த நிகழ்வு பக்தர்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

