பேராவில் திரைப்படமாக்கப்பட்ட விஐய் சேதுபதி நடித்த ‘ஏஸ் ‘ திரைப்படம் வெளியீடு கண்டது!

ஈப்போ மே. 29
பேராவில் அதிகமாக படமாக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்த ‘ ஏஸ்’ தமிழ்ப்படம் ஈப்போவில் நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

பேரா மாநில கால் பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ. அமாலுடின் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஈப்போ அருள் மிகு கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த 19-5-2023 இல் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இங்குள்ள உள்ள எல். எப். எஸ். திரையரங்கில் வெளியீடு கண்டது. பேராவில் ஈப்போ மற்றும் தைப்பிங்கில் உட்பட சில காட்சிகள் கோலாலம்பூரிலும் பட மாக்கப்பட்டது

இங்கு திரையரங்குகளில் வெளியீடு கண்ட இபட்டத்தை காண பெரும் திரளான ரசிகர்கள் குவிந்தனர்.

ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படம் விஜய் சேதுபதி 51 ஆவது படமாக கதாநாயகனாக நடிக்கிறார்
காதல் , குற்றம், நகைச்சுவை அடங்கிய கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

யோகி பாபு, பி.எஸ். அவினாஷ் மற்றும் பப்லு பிரிதிவீராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் மலேசிய நடிகர்களான டினேஸ் குமார், அல்வீன் மார்டீன், பிலிசிலியா , ஜோசோப் சுப்பையா, கார்த்திக் ஜெய் உட்பட பலர் நடித்துள்ளனர் தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது நாட்டில் உள்ள பிரபலமாக சுற்றுலா இடங்களை வெளிப்படுத்த சினிமா துறை முக்கிய பங்காற்றுகிறது என்று இந்த நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த டத்தோ அமாலுடின் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles