
வரும் 01/06/2025 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2056 வைகாசி 18ம் நாள்), மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில், காப்பார் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தின் ஆதரவில் அரசு சாரா இயக்கங்களின் முழு ஒத்துழைப்புடன் அனைத்து கொடை நெஞ்சங்களின் முன்னணியில் தேசிய வகை வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 47-ஆவது திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் & மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக ரத்னா அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.
காலை மணி 9.00க்கு திருமுறை போட்டியும் மதியம் 2 மணிக்கு மேல் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று மேலும் தெரிவித்தார்.
இந்த திருமுறை விழாவில் தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி , தேசிய வகை ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளி,தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, பாரடிக்மா பாலர்பள்ளி, சென்யுமான் மஞ்ச பாலர்ப்பள்ளி,செரா செரிய பாலர்ப்பள்ளி செமந்தா,தேசிய இடைநிலைப்பள்ளி ரந்தாவ் பஞ்சாங் கிள்ளான், தேசிய இடைநிலைப்பள்ளி சுங்கை காப்பார் இண்டா, பத்து பெலா மதுரை வீர சுவாமி ஆலயம், கம்போங் பிரப்பாட் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பெக்கான் மேரு மற்றும் காப்பார் கூட்டுப் பிரார்த்தனை அன்பர்கள் ஆகியோரை பிரதிநிதித்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் என ஏற்பாட்டுக் குழு தலைவர் தொண்டர்மணி மோகன கிருஷ்ணன் மாரி கூறினார்.
சிறப்பு விருந்தினராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் வீரமன் , சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமன்,சிலாங்கூர் மேரு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு புவான்
ஹாஜா உஸ்தாசா மரியம் பிந்தி அப்துல் ரஷித், காப்பார் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ அஜிசி பின் அயோப், செமந்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மதிப்புமிகு டத்தோ ஹாஜி ரோஸ்லி , மேரு இந்திய சமூகத்தலைவர் திரு.வாசுதேவன், செமந்தா சட்டமன்ற இந்திய சமூகத் தலைவர் திரு. கலையரசன் வத்துமலை மற்றும் பலரும் கலந்து கொன்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆகவே சுற்று வட்டார மக்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

