பேரா மாநில இந்து ஆலயங்கள் வளர்ச்சிக்கு மாநில அரசாங்கம் பெரும் பங்காற்றுகிறது!

பேரா மாநிலத்தில் ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாக பேரா மாநில இந்து சங்கம் கூறியது

இம்மாநிலத்தில் அரசாங்க நிலத்தில கட்டப்படுள்ள ஆலயங்கள் அகற்றும் நடவடிக்கையை மற்றும் முறையான தஸ்தாவேஜூகளை சங்களின் பதிவு இலாகாவிற்கு (ஆர்.ஓ. எஸ்) அனுப்பாத ஆலயங்களின பதிவுகளை ரத்து செய்ப்படும் சம்பவமும் தலை தூக்கியுள்ளது.

இந்த விவகாரங்களும பாதிக்கபட்டவர கள் அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கவனத்திற்கு கொண்டுச்சென்றுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் அவர் , (சிவநேசன்) பல நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று பேரா மாநில இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகர் பெருமாள் கூறினார்.

தற்பொழுது பேரா மாநிலத்தி்ல் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள பல ஆயங்களுக்கு அகற்ற வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சரச்சையாக இருந்து வருகிறது.

அந்த ஆலயங்கள தம்முடைய அனுமதியின்றி உடைபடாது என்று சிவநேசன் உறுதியளித்துள்ளார். முன்னதாக அவைகளுக்கு தீர்வுக்கான வழி வகைகளை ஆராய்ந்து வருவதுடன் மாவட்ட நில அலுவலக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதையும் குறிப்பிட்டார்.

ஆலய நிர்வாகங்கள் முறையான பதிவு செய்திருப்பதுடன், ஆலய தஸ்தாவேஜுகளையும் வைத்திருக்கவேண்டும், ஆலய நிர்வாகங்கள் அதன் சுற்றுவட்டார மக்களின ஒத்துழைப்புடன் சமுக பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுந்தரசேகர் பெருமாள் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles