

உலக குருதி நன்கொடையாளர் தினத்தையொட்டி செராஸ் செலாத்தான் ஏஇயோன் (AEON) பேரங்காடியில் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா (ஸ்குவாட்ஸ்), தேசிய ரத்த வங்கி மற்றும் செராஸ் செலத்தான் ஏஇயோன் பேரங்காடி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 87ஆவது முறையாக மே மாதம் 31ஆம் தேதி, ஜுன் 1ஆம் தேதி மற்றும் 2ஆம் தேதிகளில் செராஸ் செலாத்தான் ஏஇயோன் மாலில் மூன்று நாள் ரத்ததான முகாம் நடைபெற்றதாக மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா (ஸ்குவாட்ஸ்) தேசியத் தலைவர் கலைமாமணி டாக்டர் ஆர். பிரேமக் கண்ணன் கூறினார்.

உயிரைக் காக்கும் தானமே ரத்த தானம். ஒருவர் நன்கொடையாகக் கொடுக்கும் ரத்தமானது முன்று உயிர்களைக் காப்பாற்றும். இதுபோன்ற ரத்த தான முகாம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாட்டிலுள்ள பிற சமுதாயங்களோடு ஒன்றிணைக்கவும் உதவுமென்றார் அவர்.

தேசிய ரத்த வங்கியின் ரத்தப் பற்றாக் குறையைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார் அவர். 87ஆவது ரத்த தான முகாமில் உலக குருதி நன்கொடையாளர் ஹீரோ விருது தேசிய ரத்த வங்கி ஆதரவில் ஸ்குவாட்ஸ் சார்பில் பத்து குருதி நன்கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மனித உயிர்களைக் காக்கும் பொருட்டும் ரத்த தட்டுப்பாடு நிலவாமலிருக்கவும் மூன்று நாள் நடைபெற்ற ரத்த தானம் நிகழ்ச்சிக்கு 500க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான், பலாக்கோங் சட்ட மன்ற உறுப்பினர் ஓங் சூன் வூய், முகமட் ஹனாஃபி, உலுலங்காட் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் பிரதிநிதி முகமட் தஸ்லி, எம்பிகேஜே கவுன்சிலர் எட்வின், சமூக ஆர்வலர்கள், தேசிய ரத்த வங்கி மருத்துவர்கள் எல்வினா, ஹஸ்ரின், ஹசிக் பிடிஎன் 65 பணியாளர்கள், AEON நிர்வாகி ஷாஃக் ஃப்திரி. 50 மலேசிய ஸ்குவாட்ஸ் உறுப்பினர்கள், சமூகநல ஆர்வலர்கள்,
600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

