

பேரா , பத்துகாஜா, டேசா சங்காட் இந்திய செட்டில்மெண்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று சிவஸ்ரீ டாக்டர் கி. பிச்சை குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

கடந்த 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேம் சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஆலய அறங்காவலர் சந்திரசேகர் சங்கரன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்
இவ்வாலயம் பல தடைகளைக் கடந்து இன்று சொந்த நிலத்தில் 20 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அற்புதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம் மூன்றாவது கும்பாபிஷேகத்தை காண்கிறது.இந்த ஆலய கோபுரத்தில் 18 அடி உயரத்தில் அமைக்கபப்பட்ட அன்னையின் திரு உருவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தைக் காண பெரும் திரளான பக்தர்கள் திரண்டனர்

