மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles