கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் கால்பந்து, கேரம் போட்டிகள்- கவர்ச்சிகரமான பரிசுகள் வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம். ஜூன். 17- பொதுமக்கள் தங்களின் ஓய்வு நேரத்தை பயனான
வழியில் செலவழிப்பதை உறுதி செய்யும் நோக்கில் கோத்தா கெமுனிங்
தொகுதி பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஏற்பாடு
செய்து வருகிறது.

அந்த வகையில் இளையோருக்கான கால்பந்து போட்டி மற்றும் அனைத்து
வயதினருக்குமான கேரம் போட்டியை அது ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகளும்
காத்திருக்கின்றன.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் கிண்ண கேரம் போட்டி வரும்
ஜூலை மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு
புக்கிட் ரீமாவ், எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

ஐயாயிரம் வெள்ளி வரை ரொக்கப் பரிசை செல்வதற்குரிய வாய்ப்பை
வழங்கும் இப்போட்டியில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ஒரு ஜோடிக்கு 60.00 வெள்ளியாகும்.
அதே சமயம், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் கிண்ண
கால்பந்து போட்டி வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 7.30 மணி
முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஷா ஆலம், செக்சன் 21, மட்ஸுஷித்தா
அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இப்போட்டி பிரத்தியேகமாக 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட அதாவது தொடக்கப்
பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டி மித்ரா கால்பந்து கிளப்பின்
ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் முதல் இடத்தைப் பெறும் குழுவுக்கு 800 வெள்ளி ரொக்கம்,
கிண்ணம் மற்றும் பதக்கங்களும், இரண்டாம் நிலை குழுவுக்கு 500 வெள்ளி
ரொக்கம், கிண்ணம் மற்றும் பதக்கமும், மூன்றாம் மற்றும் நான்காம்
நிலையில் வரும் குழுக்களுக்கு தலா 250 வெள்ளி ரொக்கம் கிண்ணம்
மற்றும் பதக்கமும் வழங்கப்படும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles