பிரச்சினைகளை பற்றி பேசுவதை விடுத்துநம்மால் எதை சாதிக்க முடியும் என்பதை பற்றி யோசிப்போம் – டாக்டர் சத்யா பிரகாஷ்

காளிதாஸ் சுப்ரமணியம்

செரண்டா, ஜூன் 22-
நம் தொடர்ந்து குறைகளை பற்றியே நாம் பேசிக் கொண்டிருந்தால் எதையும் சாதிக்க முடியாது.

ஆகவே பிரச்சினைகளை பற்றி பேசுவதை விடுத்து நம்மால் எதை சாதிக்க முடியும் என்பதை பற்றி யோசிப்போம் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நம் சாதனை படைக்க நம் இனத்தின் ஒற்றுமை மிகவும் அவசியம்.

ஆகவே ஒற்றுமையாக செயல்பட்டால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இன்று மலேசிய இந்து சங்கம் புக்கிட் சொந்தோசா வட்டார பேரவையின் ஏற்பாட்டில் செராண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 47ஆவது திருமுறை ஓதும் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மத்தியில் முன்னேற்றத்தையும் சமய கல்வியையும் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. சமய கல்வியை கற்ற மாணவர்கள் ஒருபோதும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். ஆகையால் சிறு வயதிலேயே மாணவர்களை நாம் சமய கல்வி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய மாணவர்கள் மத்தியில் சமயம், பண்பாடு, இனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி தெரிவிக்க வேண்டுமென அவர் சொன்னார்.

இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமுறை ஓதும் போட்டி, தேவாரம், வர்ணம் தீட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles