

சுங்கைப்பட்பாணியை பூர்விகமாக கொண்ட ஆர். சிவா எழுதிய காற்று வெளியிடை கண்ணம்மா’ புதுக்கவிதை நூல் வெளியீடு் கண்டது
ஆசிரியர், முன்னாள் கல்வித் துணையமைச்சரின் சிறப்பு அதிகா பணிற்றி வந்துள்ள இவரின் முதல் புதுக்கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூல் நேற்று ( 21.6.2025) பேரா பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் வெளியீடு கண்டது.. புதுக்கவிதை என்பது மரபுக்கவிதை போன்ற யாப்பு இலக்கணக் கட்டுப்பாடுகள் இன்றி, எளிமையான நடையில் வெளிப்படும் கவிதை வடிவம் ஆகும். இது உணர்ச்சிகளையும், கற்பனைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது.

மரபுக்கவிதை, சீர், தளை, அடி, தொடை போன்ற இலக்கணக் கூறுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், புதுக்கவிதைக்கு அத்தகைய வரையறைகள் கிடையாது.
புதுக்கவிதை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் எளிய சொற்களைக் கொண்டு எழுதப்படுகிறது. இதன் மூலம், வாசகர்கள் எளிதில் கவிதையைப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் புதுக்கவிதையில், எந்தவித அலங்கார வார்த்தைகளும் இல்லாமல், செய்திகள் நேரடியாகவும், இயல்பாகவும் கூறப்படுகின்றன.
புதுக்கவிதை, கவிஞரின் உணர்ச்சிகளையும், கற்பனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக விளங்குவதாக கவிஞர் ஆர் . சிவா குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பொ. தட்சிணா மூர்த்தி அறக்கட்டளையின் நிறுவனர் டத்தோ த. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியத்தின் அந்தர செயலாளர் மு. மணிக்குமாரி ன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர். பீடோர் துன் சம்பதன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர பிராகாஷ் பெருமாளின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது.
இந்த நூலாசிரியரின அறிமுகத்தை முனைவர் வீரமோகன் வீரபுத்தரன் செய்து வைத்தார்.
பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் சிவாலெனின் அணித்துரையை செய்தார்..இந்த நிகழ்வில் ஆர். சங்கரன் சிறப்புரைடன் நடைபெற்றதுன் , இதில் முதல் நூலை டத்தொ ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
தேசிய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரனின் சிறபுரையும் இடம் பெற்றது. இதில் கலந்துக்கொண்ட எழுத்தாளர்ரகள மற்றும் பிரமுகர்கள பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

