
கோலாலம்பூர் ஜூன் 23-
புரோக்ராம் நாடி ஆஸ்ப்பிரசி நாசியோனால் பெர்சமா அனாக் மூடா (Program Nadi Aspirasi Anak Muda) அல்லது நண்பா எனும் குறுகிய முறையில் அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி தகவல் தொடர்புத்துறை அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்திய சமூகம் – அரசாங்கம் இடையே நல்லதொரு ஒத்துழைப்பையும் இணக்கத்தையும் உருவாக்கும் நண்பா நிகழ்ச்சியை அமைச்சர் பாமி பட்சில் தொடக்கி வைக்கிறார்.
வரும் ஜூன் 28 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு Dewan Merbau Iwk Eco Park Lempah Pantai மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்த நிகழ்வை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதையல் வேட்டை, விளக்க கூட்டம், அரசு மற்றும் தனியார் சார்ந்த நிறுவன முகப்பு சேவை கண்காட்சி, வண்ணம் தீட்டும் போட்டி, McDonald’s உடன் சிறுவர் மனமகிழ் நிகழ்வு,ரஹ்மா மடானி விற்பனை மற்றும் அதிர்ஷ்ட குலுக்கல் ஆகியவை இந்த நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.
நண்பா நிகழ்ச்சி இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சிறந்த மற்றும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைகிறது.
அரசாங்கத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் ஒரு தளமாக செயல்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கல்வி, தொழில் திறன் பயிற்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு இணைய பாதுகாப்பு மற்றும் மலேசியா மடாணி குறித்த தகவல்களையும் மக்களிடம் சேர்ப்பதோடு அரசாங்கத்தையும் மக்களையும் இணைக்கும் ஒரு தகவல் பலமாக இது விளங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.

