
கோலாலம்பூர் ஜூன் 23-
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றரும் கல்வி தந்தையுமான டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா இன்று காலையில் காலமானார்.
இந்திய சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும். பின் தங்கி விடாமல் இருக்க அவர் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தோற்றுவித்து கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வந்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் 30,000 க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
எல்லா வகையிலும் ஒரு சிறந்த மனிதராக அவர் வலம் வந்தார்.அவரது ஞானம் கருணை மற்றும் வலிமை அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
இவரின் மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

