

சிரம்பான்: ஜூன் 23-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின்
மீபா பியோன்ட் திட்டத்தின் கீழ் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த மூன்று நாட்களுக்கு சிரம்பான் ஐஆர்சி அரேனாவில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இப்பட்டறையில் சிறந்து விளங்கிய 50 பேர் தற்போது இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்து விளங்கும் 25 வீரர்கள் மீபாவில் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்காக தேசிய அணியில் விளையாடுவார்கள் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

அதிகமான இந்திய இளைஞர்கள் மாநிலம் மற்றும் தேசிய கால்பந்து அணிகளில் விளையாட வேண்டும் என்பது தான் மீபாவின் இலக்காகும். அதன் அடிப்படையாக கொண்டு தான் இப்பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.
இந்திய இளைஞர்கள் மாநில, தேசிய அணியில் விளையாடும் போதும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் என்று அவர் சொன்னார்.
ஆக இதுபோன்ற திட்டங்களுக்கு அனைவரின் ஆதரவு தேவை என்று அன்பானந்தன் கூறினார்.

