டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா நல்லுடலுக்கு நாளை பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம்!

கோலாலம்பூர் ஜூன் 23-
எங்கள் அன்புக்குரிய டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜாவின் மறைவை கனத்த இதயங்களில் அறிவிக்கிறோம் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.

மறைந்த டான்ஶ்ரீ தம்பிராஜாவுக்கு பெட்டாலிங் ஜெயா ஶ்ரீ முருகன் ஆசிரமத்தில் பொதுமக்கள் நாளை காலை பத்து மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இறுதி மரியாதை செலுத்தலாம் என்றார்.

இறுதி அஞ்சலிக்கு பின்னர் மாலை 3.00 மணிக்கு மேல் இறுதி சடங்குகள் செத்தியா ஆலாம் நிர்வாணாவில் நடைபெறும்.

இந்திய சமுதாயத்தின் மத்தியில் கல்வியின் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவரின் மறைவு எங்களுக்கும் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய பேரிழப்பாகும் என்று அவர் சொன்னார்.

தொடர்ந்து 42 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக வழி நடத்தி 30,000 மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்த பெருமை அவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles