சாலை விபத்தில் டத்தோ டி. முருகையா காயமுற்றார்!

கோலாலம்பூர், ஜூன் 23-
ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோ தொ.முருகையா விபத்குக்குள்ளார்.

இந்த விபத்தில் டத்தோ முருகையா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த சனிக்கிழமை ஜோகூர் பக்ரி ம.இ.கா தொகுதியின் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் கோலாலம்பூர் திரும்பிக் கொண்டிருந்த போது இரவு சுமார் 8.30 மணியளவில் பாங்கி அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.

நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கார் ஒன்றை தவிர்க்க முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டத்தோ முருகையா பயணித்த வாகனம் பலமுறை சுற்றி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டத்தோ முருகையா இடது கை, கால், கழுத்துப் பகுதியில் காயமடைந்தார்.

இந்த விபத்துக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டத்தோ முருகையா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த விபத்து குறித்து அவரிடம் கேட்ட போது, தாம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக டத்தோ முருகையா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles