சட்டவிரோத தொழிலாளர்களை
சட்டப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் அரசாங்கத்தின்
அனுமதிக்கு நகைக் கடைகள் வரவேற்பு

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை சட்டவிரோத தொழிலாளர்கள் தங்களை சட்ட ரீதியான தொழிலாளர்களாக மாற்றிக் கொள்ள உள்துறை அமைச்சு வழங்கியுள்ள அனுமதியை பெரிதும் வரவேற்கிறோம் என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை மலேசியாவில் உள்ள இந்திய நடைக்கடை பொற்கொல்லர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் அந்நியத் தொழிலாளர்களை இந்திய உட்பட 15 நாடுகளில் இருந்து தருவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகளின் விண்ணப்பங்கள் மூன்று நாட்களில் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் மனித வள அமைச்சர் வி சிவகுமார் கூட்டாக அறிவிப்பு செய்துள்ளனர்.

இதுவும் வரவேற்கக்கூடியது என்று தெரிவித்த அவர் இதன் வழி அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் நாங்கள் எதிர் நோக்கி இருக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles