

சுங்கை பட்டாணி, ஜூன் 23-
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ எஸ்.விக்னேஸ்ஸ்வரன் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
829 மாணவர்கள் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.அந்த வகையில் சிகாம்பூட் புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் ரவிந்திரன் – தமிழ்ச் செல்வி தம்பதியரின் இரண்டாவது புதல்வி பவித்ரா மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார்.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவத்தின் சகோதரர் ரவிந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து சிறப்பித்த பெரியப்பா யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் – வெரொனிக்கா தம்பதியர், பெரியவர் மாலைமுனி, அத்தைகள் விமாலா, சுசிலா, மாமா சிவகுமார் ஆகியோர் பட்டம் பெற்று சாதனை படைத்த பவித்ராவை வாழ்த்தினார்.

புக்கிட் கியாரா தோட்டப் பாட்டாளியான மறைந்த பரமசிவம் – முனியம்மா தம்பதியரின் பிள்ளைகளான டாக்டர் மனோ பரமசிவம் – ரவிந்திரன் உட்பட அவரின் உடன் பிறப்புகள் தங்களது பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தோட்ட பாட்டாளி பிள்ளைகளும் பட்டதாரி ஆகலாம் என்பதற்கு மறைந்த பரமசிவம் -முனியம்மா குடும்பம் ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகம், ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ரவிந்திரன் கூறினார்.
தாத்தா பரமசிவம் பாட்டி முனியம்மா ஆசியோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற பவித்ரா தற்போது தெலுக் இந்தான் மருத்துவமனையில் மருத்துவராக பணியை தொடங்கி இருக்கிறார்.

