இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம்! நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் – சிவகுமார்

மா.பவளச்செல்வம்

கோலாலம்பூர் ஜூன் 27-
நான் மனிதவள அமைச்சராக இருந்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவையில் பேசி இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தேன்.

ஆனால் இந்த 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான பெர்மிட் யார் யாருக்கு வழங்கப் பட்டது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளனர்.

ஆனால் 3,313 அந்நியத் தொழிலாளர்களுக்கான பெர்மிட் இந்திய முடி திருத்தும் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கடைக்கு 52 பெர்மிட், மற்றொரு கடைக்கு 400 பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் இப்போது பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது .

சங்கத்தின் சார்பில் அந்நியத் தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் அவர்கள்.

ஆனால் தங்களுக்கு போதுமான தொழிலாளர்கள் கிடைக்க வில்லை என்று சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அடுத்த மாதம் கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடம் இந்த அந்நியத் தொழிலாளர்கள் பெர்மிட் குறித்து கேள்வி எழுப்புவேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் தெரிவித்தார்.

இதனிடையே இன்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு கூட்டத்தை சிவகுமார் அதிகாரிப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அடுத்த ஆண்டு 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கொண்டாடுகிறது.

இந்த வெள்ளி விழா வெற்றி பெற தமது சார்பில் 25,000 வெள்ளி வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே சிவகுமார் தெரிவித்தார்.

ம இகா தேசிய முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி மோகன் தமது சார்பில் 10,000 வெள்ளி வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles