
கோலாலம்பூர், ஜூலை 4-
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி கூட முடியவில்லை என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் பெரும் வேதனையோடு தெரிவித்தனர்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி கூறுகையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக உள்ளது.
மலேசியா முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த உணவகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிமாஸின் தலைவர் என்ற முறையில் எங்களின் வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து கொள்கிறேன்.
அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறை சேவை தரம், சுகாதாரம், செயல்பாட்டு திறன்களை கடுமையாக பாதிக்கிறது.
பல உணவகங்கள் செயல்பாட்டு நேரத்தைக் குறைக்கவும், உணவு வகைகளை குறைக்கவும், சில சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக மூடவும் கட்டாயப்படுத்தப்படுகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் இந்திய உணவகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இருப்பினும் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் ரொட்டி சானாய் கூட பரிமாற கூட முடியவில்லை. குறிப்பாக வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியவில்லை.
எஸ்எஸ்டி வரி சேகரிப்பதில் உணவகத் துறையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கை அளிக்கிது. ஆனால் அந்நியத் தொழிலாளர் விவகாரங்களில் ஒருபோதும் எங்களுக்கு எந்த முன்னுரிமையும் கிடைக்கவில்லை.
இந்நிலை நீடித்தால் பல உணவகங்களில் மூட வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் நாட்டின் வருவாயையும் பாதிக்கும்..
ஆகவே இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் முழுமையாக தீர்வு காண வேண்டும். 2026 மலேசிய வருகை ஆண்டுக்கு முன் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முழு தீர்வை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

