35 சொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள்!
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியிடம் மகஜர் சமர்ப்பிப்பு

சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 இந்திய இளைஞர்களை விடுதலை செய்யுங்கள் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கெடா சுங்கை பட்டாணி பீடோங் தை எங் தோட்ட ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ இராமபிரானுக்கு பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்ட போது சரஸ்வதி கந்தசாமியிடம் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கெடா மாநிலத்தில் 35 இந்திய இளைஞர்கள் இப்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களின் குடும்பங்கள் பல மாதங்களாக போராடி வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles