
கோலசிலாங்கூர் , ஜூலை 11-
மலேசிய திருநாட்டில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் இயற்கையழகும், எழிழ்வளமும், நிறைந்த கோலாசிலாங்கூர் மாவட்ட அருகில் கல்வி, செல்வம் மற்றும் வீரம் நிறைந்த கமாசான் தோட்டத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் கொண்டு திருவருள் புரிந்து வரும் அன்னை ஸ்ரீ மஹா துர்காபரமேஸ்வரியின் திருக்கோவில் திருப்பணிகள் பூர்த்தி பெற்று மங்களகரமான மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது முன்னிட்டு,
நிகழும் மங்களகரமான ஆனிமாதம் 29-ஆம் நாள் (ஆங்கிலம் 13.07.2025) ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணபட்ச, திருதியை திதியும், திருவோண நட்சத்திரமும், அமிர்தசித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 10.00க்கு மேல் 11.30 க்குள் ஸ்ரீ தூர்காபரமேஸ்வரிக்கு மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மிதுன லக்கனத்தில் மஹா கும்பாபிஷேகம் வைபவம் நடைப்பெற திருவருள் சித்தியாகிவுள்ளது.

ஆகையால் பக்த பெருமக்கள் அனைவருக்கும் அனைவரும் திரளாக வருகை தந்து அன்னை தூர்கா பரமேஸ்வரியின் திருவருள் கடாட்சம் பெற்றுய்யுமாறு அன்புடன் ஆலய நிர்வாகம் அழைக்கின்றோம்.
சிறப்பு வருகை :
டத்தோ சிவகுமார் நடராஜா
அறங்காவலர்
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் கோலாலம்பூர்
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்
திரு. குருசாமி நாகு
தலைவர்
0126572209
திரு. கணேசன் ஆண்டியப்பன்
துணை தலைவர்
0163965401
திரு. சதிஸ் சங்கரலிங்கம்
பொருளாளர்
0192520096

