சுங்கையில் குற்றவியல் சம்பவம் குறைவு – இந்திய அதிகாரி தேவை!!

சுங்கை,ஜூலை11: சுங்கை சட்டமன்றத் தொகுதியில் பெருங்குற்றங்களும் தீயச் செயல்களும் பெரும் அளவில் இல்லை.இங்கு சின்னச் சின்ன குற்றங்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில் அதனை களைய காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கேட்டு கொண்டார்.

சுங்கை மிகவும் அமைதியான மற்றும் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நம்பிக்கையான ஊர் எனவும் குரிப்பிட்ட சிவநேசன் அந்நிலை தொடர்ந்து தற்காக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சுங்கை காவல்நிலையத்திற்கு புதிதாகத் தலைமையேற்றிருக்கும் சார்ஜன் ரூஷ்மாடி பின் இரம்லி சுங்கை சட்டமன்ற உறுப்பினரை மரியாதை நிமித்தமாய் சந்தித்தபோது சிவநேசன் இக்கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும்,சுங்கை காவல்நிலையத்தில் ஓர் இந்திய காவல்துறை அதிகாரி கடந்த 10 ஆண்டுகளாய் இல்லாததையும் சுட்டிக்காண்பித்த சிவநேசன் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் சார்ஜன் ரூஷ்மாடியை கேட்டுகொண்டார்.

இதற்கிடையில்,சுங்கையில் இளைஞர்கள் மத்தியில் நிலவிடும் சிறுசிறு குற்றவியல் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கை அவசியமென்பதையும் நினைவுக்கூர்ந்த சிவநேசன் சுங்கையில் தாம் அமைத்திருக்கும் தொழிற்துறை பயிற்சி (TVET) மையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் பயிற்சிக்குப் பின்னர் வேலை வாய்ப்பும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,இங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் காவல்துறை கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

முன்னதாக சீறுடை பணியாளர்களில் கடைநிலைப் பணியாளர்களுக்கு நிலத்திட்டத்தின் கீழ் தாம் நிலப்பட்டா வழங்கியிருப்பதாகவும்,பீடோர்,சுங்கையில் தலா இருவர் என்னும் நிலையில் நால்வருக்கு நிலப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சம்மதப்பட்ட அவர்கள் தங்களின் உயர் அதிகாரிகளின் அனுமதியோடு விண்ணப்பம் செய்து அதனை பெற்று கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சுங்கை சட்டமன்றம் எல்லா காலத்திலும் அமைதியும் சுமூகமும் கொண்டிருப்பதோடு குற்றவியல் இல்லா நகரமாய் உருமாற வேண்டும் எனவும் விவரித்த சிவநேசன் சுங்கை காவல்நிலையத்தின் மேஜர் ரூஷ்மாடியின் கோரிக்கைக்கு ஒப்ப மேஜை நாற்காலிகளை வழங்குவதாகவும் கூறினார்.

அதேவேளையில்,சுங்கை காவல்நிலையத்தில் இந்திய அதிகாரி இருப்பதை உறுதி செய்ய மாவட்ட்,மாநில காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்ததிற்கு இவ்விவகாரத்தைக் கொண்டுச் செல்வதாகவும் கூறிய அவர் சிவநேசனின் ஒத்துழைப்பிற்கு உதவிக்கும் நன்றியும் தெரிவித்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles