கூடுதல் தமிழ்ப்பள்ளிகளை அமைக்க வழிகளை
கண்டறிவோம்!
மனித வள அமைச்சர் வி சிவகுமார் வேண்டுகோள்





உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் சொந்த நாடுகளில் தமிழ்ப் பள்ளிகளை அமைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களால் உலகளாவிய அளவில் புத்தாக்க போட்டிகளில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகளை அமைக்க வழிகளை கண்டறிய வேண்டும் என்று தமிழ்நாடு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயல் நாட்டு தமிழர்களின் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

சென்னையில் நடந்த அனைத்துலக தமிழ் மாநாட்டில் அமைச்சர் சிவகுமாரின் உரை பெரும் கைதட்டல்களைப் பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles