
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களின் வளர.ச்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடர்ந்து படுபட்டு வருவதாக தம்புன் நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி டத்தொஆர். சுரேஸ்குமார கூறினார்.
இந்த வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள் , தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆதரவு வழங்கி வருவதையும் எடுத்துரைத்தார்.

டத்தோஸ்ரீ அன்வாரின் வெற்றிக்கு இந்திய வாக்காளர்கள பெரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.்ஆகவே இந்த வட்டாரத்தில் இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.
இந்த தொகுதியில் உள்ள் மக்களுக்கு பல நலத்திட்டங்கள வகுக்கப்பட்டுள்ளது.அதிலும் இந்தியர்கள் பயன் அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தான் சமயபர மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 47 ஆவது திருமுறை ஓதும் போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இதனைக் கூறினார்.
இந்த வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடைத்தப்படும் திருமுறை ஓதும் விழாவில். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியாக உள்ளது என்று தஞ்சோங் ரம்புத்தான் இந்து சங்கத் தலைவர் சந்திரன் கூறினார..
ஆலயங்களில நடைபெறும் சமய நிகழ்வுகளில் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது
ஆலயங்களில் நடத்தப்படும் சமய நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள பெற்றோர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டு என்றார்
இந்த விழாவில் சமய வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் திருமுறை ஓதும் போட்டியில் வெற்றி ப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 160 மாணர்க்கள் கலந்துக்கொண்டனர்.

