
கோலாலம்பூர் ஜூலை 19-
மஇகா மத்திய செலவை கூட்டம் நேற்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தலைமையில் இன்று ஜூலை 18, வெள்ளிக்கிழமைபிற்பகலில் நடைபெற்றது.
மஇகா தேசிய தலைமையகக் கட்டடத்தில்
கூட்டம் தொடங்கும் முன், மஇகா முன்னாள் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
மஇகா சாதனைத் தலைவர் துன் சாமி வேலுவிற்கு பிறகு மஇகா-விற்கு தலைமையேற்று வழிநடத்தியவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளத்துறை முன்னாள் அமைச்சருமான பழனிவேலு அண்மையில் காலமானார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய மத்திய செலவைக் கூட்டத்தில் அண்ணாருக்கு மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், தேசிய உதவித் தலைவர்கள், மகளிர் – இளைஞர் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

