
கோலாலம்பூர் ஜூலை 19-
ஜோகூர் பாருவில் 18/07/2025 தமிழ் மாணவர்களை ஏற்றி சென்ற
பள்ளிப் பேருந்து சாலை ஓரத்தில் திறந்து கிடந்த குழியில் விழுந்து விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமுற்று சுல்தான் அமினா ( HSA) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உண்மையிலேயே சாலை ஓரம் திறந்து கிடந்த குழியில் பேருந்து விழுந்தது என்றால் ஏன் சாலை ஓர குழி மூடாமல் கிடந்தது மற்றும் யார் இதற்கு பொறுப்பு என்ற முழு விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்.
சமீப காலமாக, சாலை விபத்துக்கள் நம்முடைய நாட்டுக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உள்ளது. அதுவும் இன்றைய சூழலில் அதிகமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சாலை பராமரிப்புக்கு அரசாங்க நிதிகள் நிறைய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விபத்துக்கள் பேருந்தில் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு என்பது சாலையில் பயணிப்பவர்களின் உயிர் தொடர்பானது. சாலையில் பயணிப்பவர்கள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றி, கவனமாகவும், பொறுப்புடனும் நடந்து கொண்டால் மட்டும் போதாது , மக்கள் பயணிக்கும் சாலைகளை பாதுகாப்புடன் இருக்க உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதரின் உயிரும் உன்னதமானது, மனிதர்களின் உயிர் மட்டும் அல்ல பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் பூமிக்கு முக்கியம். இன்றைய சூழலில் சாலைகளில் விலங்குகள் நிறைய விபத்துக்குள்ளாகி இறந்து கிடப்பதை நாம் நிறைய பார்க்கிறோம். அதற்கு என்ன தீர்வு என்பதையும் அரசாங்கம் ஆராய வேண்டும்.
எனவே அரசாங்கம் இந்த விபத்துக்கான முழு விசாரணை நடத்த வேண்டும் மற்றும் மாணவர்களின் உடல்நலத்தை உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கணேசன்
உரிமை அரசியல் இயக்கம்

