
கோலாலம்பூர் ஜூலை 19-
மலேசிய இந்து சங்கத்தில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் தனி நபர்களை புறக்கணித்து என் தலைமையிலான வெற்றி அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலும் 48 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நாளை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறுகிறது.
நாடு தழுவிய அளவில் 2,000 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் இந்து சங்கத்தை பிளவு படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலேசிய இந்து சங்கத்தில் தனிநபர்கள் ஊடுருவி சங்கத்தை அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை பேராளர்கள் முறியடிக்க வேண்டும்.
இதற்கு இந்து சங்கத்தின் பேராளர்கள் துணை போகக்கூடாது.
மலேசிய இந்து சங்கத்தின் பேராளர்கள் விவேகத்துடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும்.
பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் தனிநபர்களை புறந்தள்ளி மலேசிய இந்து சங்கம் சரியான பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போட முன்னோறுவோம் முன்னோற்றுவோம் என்ற வெற்றி அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்க ரத்னா டத்தோ மோகன் ஷான் என்னுடன் இணைந்து வெற்றி அணியில் இடம் பெற்றுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தை தொடர்ந்து சரியான பாதையில் வழிநடத்த எங்கள் அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக மஇகா, மஹிமா, பக்கத்தான் ஹராப்பான், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே ஊடகங்கள் இரு தரப்பு செய்திகளையும் நியாயமான முறையில் வெளியிட வேண்டும்.
ஒரு தரப்பு செய்தியை வெளியிட்டால் மற்றொரு தரப்பையும் தொடர்பு கொண்டு அவர்களின் செய்தியையும் வெளியிட வேண்டும். இதுதான் பத்திரிகை தர்மம் என்று டத்தோ மோகன் ஷான் தெரிவித்தார்.

