மாண்புமிகு சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது !

சென்னை, ஜூலை 20-
தமிழ்மொழி வளர்ச்சியை உலகளவில் தொடர்ந்து முன்னெடுக்கும் இயக்கமாக பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவில பேரா மாகானத்தில் அதன் மாநில அமைச்சராக வகித்து வரும் அ. சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

தமிழ்நாட்டில் பேராசிரியர் முனைவர் சங்கர் கலியன் நிறுவனர் மற்றும் தலைவராகவும் பேராசிரியர் முனைவர் பா.ஜான்சிராணி அவர்களை செயலாளராகவும் கொண்டு பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று ஞயிற்றுக்கிழமை 20.07.2025 ஆம் தேதி தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும்-இன்றும் எனும் பொருண்மையில் பன்னாட்டு தொல்லியல் மாநாடு ஆய்வு நூல் வெளியீடு, விருது வழங்குதல் நிகழ்வு வடபழனி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது்

இம்மாநாட்டில் சிறப்பு வருகையாளராக பேராக் மாநில சுகாதாரம், மனித வளம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் விவகாரம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அவர்களுக்கு அரசியல் களத்தில் பயணிக்கும் மக்கள் பணிக்காகவும் அயராமல் ஆற்றும் தமிழ்மொழித் தொண்டிற்காகவும் சமய தொண்டிக்கும்
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது.

இதனிடையே,பேராக் மாநில மக்கள் ஓசை தலைமை நிருபர் எஸ்.லிங்கேஸ்வரனுக்கு எழுத்து துறை தொடர்பாக விருதும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் சிறப்பாக சமுதாய சேவையில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கும் சமுக சிந்தனையாளர் கி.மணிமாறனுக்கும் விருது வழங்கி கௌரவக்கப்பட்டனர்

இந்திய நாட்டின் முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது.

மேலும் இம்மாநாட்டில் சி.ஏ.மல்லை சத்தியா, துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தித் தொடர்புத் தலைவர், தி.மு.க., ரஷ்சியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் சேகர் சாமியப்பன், ஈப்போ முத்தமிழ்ப்பாவலர் மன்றத்தின் தலைவர் கவிஞர் அருள் ஆறுமுகம் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்

புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனத்தின் சார்பாக அமெரிக்காவிலிருந்து வருகைந்த பாலா கண்ணன் முன்னிலை வகித்தார்.

மேலும் இலங்கை, மொரீசியசு, அமெரிக்கா, ரஷ்யா, லண்டன், சிங்கப்பூர், கம்போடியா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்சு, ஆங்காங்கு, எத்தோப்பியா போன்ற நாடுகளிலிருந்து தமிழறிஞர் பெருமக்களும் அவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டிற்காக விருது வழங்கப்பட்டது

இம்மாநாட்டில் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம், அமெரிக்கா, ரஷ்யா தமிழ்ச் சங்கம், ரஷ்யா, ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா போன்ற பன்னாட்டு தமிழ்மொழிக்கான அமைப்புகள் இணைந்து பயணிற்றினர்

மேலும் சோழர்கால வரலாற்றுச் செய்திகளை அயலகத் தமிழறிஞர்கள், தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கட்டுரைகள் வழங்கி பங்கேற்க உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles