
கோலாலம்பூர், ஜூலை 22
கிட்டத்தட்ட 900 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் சர்ச்சைக்குரிய ஜம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் மீது வழக்குத் தொடராத அட்டர்னி ஜெனரல் அறையின் (ஏஜிசி) முடிவு குறித்து மஇகா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான், ஆதாரங்கள் இல்லாததால் ஏஜிசி இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.
இது தொடர்பாக பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நாட்டின் சட்ட அமைப்பின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று கூறினார்.
“3R கொள்கை, அதாவது இனம், மதம் மற்றும் அரச நிறுவனங்கள், ஒரு மதம் அல்லது இனத்தை மட்டும் பாதுகாப்பதற்கான சட்ட கருவி அல்ல என்றும் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் உள்ள அனைத்து சமூகங்களிலும் மத நல்லிணக்கம், பொது ஒழுங்கு, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க 3ஆர் விதிகள் உள்ளது.
ஆக இன்று மலேசியாவில் 3ஆர் கொள்கைக்கு ஏதேனும் அர்த்தம் இருந்தால்,அது அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளுக்கும் நியாயமாகவும், உறுதியாகவும், நேர்மையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சட்டத்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ அஸாலினாவின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

