

ஈப்போ, ஜுலை.23: இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் ஈப்போ வட்டார பேரவையின் 47 ம்.ஆண்டு திருமுறை ஓதும் விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு வெற்றிப்பெற , 3 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துள்சி கூறினார்.
இன்று இங்கு அதிகமான மாணவர்கள் திருமுறை ஓதும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதை காண முடிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த மாவட்ட பேரவையின் இந்து சங்க சேவையாளர்களின் அர்பணிப்பால் பல மாணவர்கள் திருமுறை ஓதும் பயிற்சியை மேற்கொள்வதோடு, அதன் தொடர்ச்சியாக அவர்கள் வாழ்வாதாரத்திலும் உயர்நிலையை கண்டு வருவதை காண முடிகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆகையால், இந்த இந்து சங்க சேவையாளர்களின் அர்பணிப்பை என்றென்றும் நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகும். அத்துடன், இந்த திருமுறை ஓதும் பயிற்சி மற்றும் செயல்நடவடிக்கையால் பல சிறந்த ஒழுக்கம், நன்னெறி பண்புகள் கொண்ட மாணவர்களை இத்தகைய நிகழ்வின் வாயிலாக சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் சொன்னார்.
நம்மிடம் திருமுறை, திருவாசகம், திருமந்திரம், திருபுகழ் போன்ற அரிய நூல்கள் உள்ளன. இவைகளை நாம் படித்து இன்புற வேண்டும். இதிலுள்ள சாரங்கள் மற்றும் கருத்தினை நன்கு படித்து புரிந்துணர்வோடு செயல்பட வழிவகுக்கிறது. ஆகையால், இந்துக்கள் இத்தகைய நூல்களை படித்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.
இங்கு நடைபெற்ற திருமுறை ஓதும் போட்டியில் வெற்றிப்பெறவது முக்கியமல்ல. ஆனால், அதில் பங்கேற்று புரிந்துணர்வுடன் படித்து அதன் பொருளை விளங்கி, வாழ்கையில் செம்மையாக வாழ்வதே சிறந்த பண்புநலனாகும். இத்தகைய செயல்நடவடிக்கையால் சிறந்த உருமாற்று திட்டத்தை இந்து இளைஞர்களிடையே கொண்டு வரமுடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் திருமுறை ஓதும் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இம்முறை ஈப்போ இந்து சங்க வட்டாரப் பேரவையின் தலைவர் கி.விஜயகுமரன் மற்றும் அவரது நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். சிறப்பு பிரமுகர்களாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துள்சி, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி மு.இந்திரன், பேராக் இந்து சங்க தலைவர் பி.சுந்தரமற்மற்றம, பத்துகாஜா சிறைச்சாலை இயக்குநர் ஏசிபி தனபாலன் மற்றும் இதர பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பித்தனர்

