
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா கிளாந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணியுடன் ஒருமித்த கருத்துடன் ஒத்துழைக்க ம இகா தயாராக இருப்பதாக அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றாலும் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.
சிலாங்கூர் உட்பட நாடு தழுவிய அளவில் இரு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி ஆகியோர் தேசிய முன்னணியுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

