
நடந்து முடிந்த தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் யூனிஸ் வரன் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்ட ம இகா வேட்பாளர் டான்ஸ்ரீ இராமசாமி இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தேசிய முன்னணியும் இடம் பெற்றுள்ள வேளையில் டான்ஸ்ரீ இராமசாமியின் வழக்கு மனு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நீதிமன்றத்தில் ம இகா வேட்பாளர் டான்ஸ்ரீ இராமசாமியின் வழக்கை சந்திக்கத் தயார் என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ் வரன் தெரிவித்தார்.
மக்களின் ஆதரவோடு சிகாமாட்டில் அமோக வெற்றி பெற்றுள்ளேன்
நான் பெற்ற வெற்றியை நீதிமன்றம் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

