காஜாங் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர் கதிரவனுக்கு குடியுரிமை கிடைக்க உள்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதுவேன்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

காஜாங் தமிழ்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன் கதிரவனுக்கு குடியுரிமை கிடைக்க உள்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதுவேன் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் இன்று தெரிவித்தார்.

கதிரவனின் தாயார் மணிமேகலை மலேசியப் பிரஜை. தந்தை பார்த்திபன் இந்திய பிரஜை.

கதிரவன் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் காஜாங் தமிழ்ப் பள்ளியில் படித்தாலும் சில சட்ட சிக்கல் காரணமாக இன்னும் அவருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை.

எனது மகனுக்கு குடியுரிமை கிடைக்க உதவி செய்யுங்கள் என்று மனித வள அமைச்சரை கதிரவனின் தாயார் மணிமேகலை கேட்டுக் கொண்டார்.

இதனை கவனத்தில் கொண்ட அமைச்சர் சிவகுமார் இந்த மாணவனின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.

ஆகவே கதிரவனுக்கு குடியுரிமை கிடைக்க உள்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதுவேன் என்றார்.

குடியுரிமை, பிறப்புப் பத்திரம் இல்லாதவர்களுக்கு உதவி வரும் டிரா மலேசியா சரவணன் பேருதவி புரிந்து வருகிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles