ரவாங் மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மைய வாகனத்தில்
லிப்டு பொருத்துவதற்கு
மனித வள அமைச்சர் சிவகுமார் 25,000 வெள்ளி நிதியுதவி!

ரவாங் மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தில் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தி வரும் வேனில் லிஃப்ட் பொருத்துவதற்கு மனித வள அமைச்சர் வி. சிவகுமார் 25,000 வெளிளியை வழங்க முன் வந்துள்ளார்.

மனித வள அமைச்சில் மக்கள் குறைகளை கேட்டறியும் மக்கள் நிகழ்ச்சியின் போது ரவாங் மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்ஸ் சிவா கூறுகையில் மாற்றுத் திறனாளிகளான நாங்கள் பயன்படுத்துவதற்கு மலேசியா வழக்கறிஞர்கள் மன்றம் புதிய வேனை வாங்கிக் கொடுத்துள்ளது.

இந்த வேனில் சக்கர நாற்காலியுடன் ஏறி அமர்வதற்கு லிஃப்ட் பொருத்த வேண்டும். இதற்கு 25,000 வெள்ளி தேவைப்படுவதாக சொன்னார்.

இவரின் பிரச்சினையை கேட்டறிந்த அமைச்சர் வி. சிவகுமார் உடனடியாக 25,000 வெள்ளியை அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles