
மலேசியா நண்பன் செய்தி ஆசிரியர் செ.வே. மலைச்செல்வன், தினத்தந்தி சிட்டிசன் இணையத்தளம் ஆசிரியர் செ.வே. முத்தமிழ் மன்னன் ஆகியோர் சகோதரரும் நாடாறிந்த சமுதாய போராட்டவாதியும் குவாங் கெஅடிலான் கட்சி தலைவருமான செ.வே. தமிழ்க்கலை அவர்களின் அன்பு துணைவியார் திருமதி முல்லை இன்று மதியம் 3.40 மணிக்கு சுங்கை பூலோ மருத்துவமனையில் காலமானார்.
நாளை ஜனவரி 18 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு மேல் No 11, Jalan 11/10, HIjau 16, Tasik Putri Rawang Selangor என்ற முகவரியில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர் திருமதி முல்லை யின் நல்லுடல் சுங்கை பூலோ இந்து மையானத்தில் தகனம் செய்யப்படும்.
தமிழ்க்கலை – முல்லை தம்பதியருக்கு பார்த்தீபன், தமிழரசு என்ற இரு புதல்வர்கள்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினராக தமிழரசு பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

