

அடுத்த மாதம் புதிய பட்ஜெட்டை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் தொடர்பில் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் இன்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கலந்துரையாடல் நடத்தியதாக மைக்கித் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிறு நடுத்தர வியாபாரிகளை மேம்படுத்த கடன் உதவிகள், 200 மில்லியன் தெக்கூன் – எஸ்.எம்.இ போன்ற அமைப்புகளின் வாயிலாக ஒதுக்கப்பட வேண்டும் என மைக்கி பரிந்துரை செய்துள்ளது>
இந்த நிதிகளைக் கண்காணிக்கவும், வியாபாரிகளுக்கு வழிக்காட்டவும் 2018 – க்கு முன் இருந்தது போல் சீட் எனப்படும் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு சிறப்பு செயலகம் மீண்டும் பிரதமர் துறையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்

