
புத்ரா ஜெயா, ஜூலை 23-
மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா உதவி தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிரடியாக அறிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். 100 ரீங்கிட் உதவி தொகை நேரடியாக மக்களின் அடையாள அட்டைகளில் செலுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை டைடின், லோட்டஸ், எக்கோன் சேவ், 99 ஸ்பீட் மார்ட் கடைகளில் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
நூறு ரிங்கிட் தேவை இல்லை என்று நினைப்பவர்களின் உதவித் தொகை மீட்டுக் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

