
கோலாலம்பூர்: ஜூலை 23-
பல்வேறு உதவி திட்டங்கள் வழி நாட்டு மக்களின் சுமையைக் குறைக்கும் மடானி அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் இன்றைய அறிவிப்புகள் நிரூபித்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அறிவித்ததற்காக பிரதமருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மடானி அரசாங்கத்தின் மக்களின் நாடித் துடிப்பை அறிந்து பல்வேறு வகையான உதவிகள் மூலம் சுமையைக் குறைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் இன்றைய அறிவிப்புகள் நிரூபிக்கிறது.
இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

