
கோலாலம்பூர் ஜூலை 24-
நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேற்று ஆறு
அம்சங்கள் அடங்கிய திட்டங்களை அறிவித்தார்.
வரும் செப்டம்பர் முதல் ரோன் 96 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1வெள்ளி 99 காசாக விற்பனைக்கு வரும்.
மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு சாரா திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தலா 100 வெள்ளி.
டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் ரஹ்மா மடானி விற்பனை திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு, இனம், மதம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களின் பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும் என்று லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ்.பக்தவச்சலம் தெரிவித்தார்.
பிரதமர் என்ற முறையில் நாட்டை சிறந்த முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழி நடத்தி வருகிறார்.
அவர் பதவி விலக வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் அவர் பதவி விலக தேவையில்லை என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களின் உணர்வுகளை புரிந்தவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆவார்.
அவர் தனது கடமைகளை செய்ய கால அவகாசம் தேவை.
கண்டிப்பாக இந்திய சமுதாயத்திற்கும் நிறைய உதவிகளை செய்வார்.
அவர் ஒரு போதும் இந்திய சமுதாயத்தை கைவிட மாட்டார்.
இன்றைய சூழ்நிலையில் வேறு எந்த தலைவரையும் நம்பி பயன் இல்லை என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.
இதனிடையே லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் அணி நிரந்தர துணை தலைவி ஷினா மற்றும் லெம்பா பந்தாய் கெஅடிலான் உறுப்பினர் ஸ்டார் மணியம் கூறுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த ஆறு அம்ச திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறினர்.
மோசமான நிலையில் நாடு இருந்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்றார்.
இப்போது நாடு சரியான திசையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அவருக்கு கால் அவகாசம் தேவை.
இனி வரும் காலங்களில் அவர் நல்ல திட்டங்களை மக்களுக்கு அறிவிப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
ஆகவே அவர் பதவி விலக வேண்டியதில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

