எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளி -வீட்டு- பொருளாதார மேம்பாட்டு நிதியை அரசு உருவாக்க வேண்டும்! டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள்

கோலாலம்பூர், ஆக 1-
இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலன்கள் காக்க தமிழ்ப்பள்ளி, பொருளாதாரம் மற்றும் வீடு மேம்பாட்டு சிறப்பு நிதியை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்தார்.

13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் 13 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயம் விடுபடாமல் இருக்க அரசாங்கம் சிறப்பு மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும் என்றார்.

குறிப்பாக தமிழ்ப் பள்ளி மேம்பாட்டு சிறப்பு நிதி, பொருளாதாரம் ஊக்குவிப்பு மற்றும் வீடுகள் வாங்குவதற்கு நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles