
கோலாலம்பூர் ஆக 1-
அதிருப்திகளை வெளிப்படுத்தியதற்காக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனை சாடுவது அநாகரிகமான செயல் என்று
பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தில் உள்ள அதிருப்திகள் குறித்து ஊடக சந்திப்பில் அவர் பேசியிருந்தார்.
அமைச்சர் பதவிகள் உட்பட அனைத்திலும் ஏற்பட்ட புறக்கணிப்புகள் குறித்து அவர் மனக்குமுறல்களை கொட்டினார்.
மஇகாவுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
ஆனால் அவரின் ஆதங்கங்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் கேலி செய்வதும் அநாகரிகமான செயலாக எனக்கு தெரிகிறது.
மஇகா ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. அதனால் உங்களுக்கு என்ன தகுதி உண்டு என உறுப்பு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் கேள்வியை எழுப்பி உள்ளார்.
அப்படி என்றால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்திய சமுதாயம் கேள்வி கேட்க கூடாதா?
ஒருவேளை எழுப்பினால் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி கேலி கிண்டல் செய்வீர்களா
மூத்த அரசியல் தலைவர்கள் பேசும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
டத்தோஸ்ரீ சரவணன் என்பது தனிநபர் அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாக உள்ளார்.
அவரை கேலி செய்வது சமுதாயத்தை கேலி செய்வதாகும் என்று டத்தோ லோகபாலா கண்டித்தார்.

