
கோலாலம்பூர்,அக01: பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்பித்த நாட்டின் 13வது மலேசியத் திட்டத்தை தாம் நன்நிலையில் வரவேற்ப்பதாக கூறிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் இந்த ஐந்தாண்டு திட்டம் நாட்டின் வளர்ச்சியை மட்டும் உயர்த்திடாமல் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தைதின் மூலதனமாகவும் உருவெடுத்து மலேசியாவை செயற்கை நுண்ணறிவில் தூரநோக்கு இலக்கோடு பயணிக்க வைக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
செயற்கை நுண்ணறிவோடு தொழில்நுடபம் சார்ந்த உந்துகளில் மிக முக்கியமான நாடாக மலேசியாவை நகர்த்தி செல்லும் ஆற்றலையும் உந்துதலையும் முன்னெடுக்கும் வகையில் நாட்டின் 13வது மலேசியத் திட்டத்தை மடானி அரசாங்கத்தின் தலைவருமான பிரதமர் சமர்பித்திருப்பதாகவும் கூறிய அவர் எல்லாத்துறைகளிலும் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் உருமாற்று சாக்தியாக 13வது மலேசியத் திட்டம் அமைந்திருப்பதாகவும் கூறினார்.
உலகம் நவீனத்துவத்தின் வளர்ச்சியில் துரித வளர்ச்சியையும் மேம்பாட்டையும் நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.உலக நாடுகளின் பொருளாதார மேம்பாடும் வளர்ச்சியும் நவீனத்துவத்தாலும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதீநவினத்தாலும் கட்டமைக்கப்படுகிறது.உலக நாடுகளுக்கு ஈடுகொடுத்து முன்னேறவும் வளர்ச்சியில் அடுத்தக்கட்டத்தை நோக்கி உயரவும் 2030க்குள் நாம் எல்லா நிலையிலும் அதீதநவினத்துவத்தால் ஆளுமை கொள்ள வேண்டும் என்றும் சிவகுமார் நினைவுறுத்தினார்.
அதனை சாத்தியப்படுத்தும் வகையில் 2030இல் சுகாதாரம், கல்வி, விவசாயம், பாதுகாப்பு, பொது சேவைகள் மற்றும் அரசு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வலுப்படுத்தப்பட வேண்டும்.இதன் வாயிலாக பொருளாதார உச்சவரம்பும் பெரும் இலக்கை எட்டும்.மக்களின் நல்வாழ்வும் நல்லாட்சியால் வளமையும் செழிப்பும் கொள்ளும் எனவும் குறிப்பிட்ட அவர் நாட்டின் 13வது ஐந்தாண்டு திட்டம் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கும் மக்களுக்கான உயரிய பார்வைக்கும் சான்றாகவே அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சிவகுமார் அரசாங்கத்தின் கீழ்கண்ட நடவடிக்கைகள் அல்லது செயல்திட்ட வரைவுகளை வரவேற்ப்பதாக கூறினார்:
- தொழில்நுட்ப கல்வியறிவு, ஆராய்ச்சி மற்றும் புதுமை மூலம் AI மற்றும் டிஜிட்டல் துறையில் உள்ளூர் திறமை மேம்பாட்டை வலுப்படுத்துதல்;
- கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்;
- தேசிய AI செயல் திட்டம் 2030க்கு ஏற்ப தெளிவான தேசிய AI கொள்கையை உருவாக்குதல்;
- வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொது சேவை வழங்கலை மேம்படுத்த அரசு சேவைகளில் (GovTech) AI பயன்பாட்டை விரிவுபடுத்துதல்;
- பொது மற்றும் தனியார் துறைகளின் ஈடுபாட்டுடன் மூலோபாய முதலீடுகளை வலுப்படுத்துதல்.
13வது மலேசியா திட்டம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், நமது டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தும் மற்றும் இளம் மலேசியர்களுக்கு அதிக திறமையான வேலை வாய்ப்புகளைத் ஏற்படுத்தும் என்று தனது நம்பிக்கையினை அவர் வெளிப்படுத்தினார்.
13வது மலேசியா திட்டம், அனைவருக்கும் நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் முன்னேற்றம் என்ற மதிப்புகளை வலியுறுத்தும் மடானி மலேசியாவின் கொள்கைகளுக்கு இணங்க, உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்கு மேம்பாட்டு ஆவணமாகவும் திகழ்வதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

