இடைநிலைக் கல்வி கட்டாயமாக்கும் புதிய சட்டத்தை – உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் வரவேற்கிறது

ஐந்தாம் படிவம் வரை இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டுவருவதை உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மகிழ்வுடன் வரவேற்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

வறுமை, ஆதரவின்மை போன்ற சில காரணங்களால் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிட்டு ஏழ்மை, அறியாமை, வேலை வாய்ப்பின்மை, தவறான பழக்க வழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபாடு போன்ற எண்ணற்ற சிக்கலை தவிர்க்க முடியும்.

உயர்ந்த கல்வியும் உன்னத ஒழுக்கமும் பெற்ற மாணவனே வீடு நாடு உலகம் போற்றும் சிறந்த மனிதனாவான். இந்த இலக்கிற்கு இடையூறாக இருக்கும் இடையிலே இடைநிலைக் கல்வியை முடிக்கும் வாய்ப்பை இச்சட்ட திருத்தம் முறியடிக்கும் என்றார்.

இச்சட்ட திருத்தத்திற்கு துணை நின்ற மடானி அரசு, கல்வி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரை மறைவில் போராடியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வேளையில், இதேபோல இடைநிலைப் பள்ளியின் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழி பாடத்தையும் கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தையும் கொண்டுவர வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் சார்பில் பரிந்துரைப்பதாக திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles