
மஞ்சோங், ஆக.1: நடைபெற்று முடிந்த பேரா மாநில அளவிலான திடல் தட போட்டியில், பெண்கள் பிரிவு 12 வயதிற்குட்பட்ட நீளம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று மாணவி ஹேமாதர்ஷினி வேல்முருகன் பெருவாஸ் தமிழ்ப்பள்ளிக்கும் மஞ்சோங் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 4.26மீ தூரத்தை பதிவு செய்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவ்வேளையில் இம்மாணவியை பள்ளி தலைமையாசிரியர் குணசீலன் மற்றும் பள்ளித்துணைத்தலைமயாசிரியர் பவித்ரன் ஆகியோர் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இம்மாணவி கடந்த ஆண்டு நடந்த இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

