
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 3-
இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 31 ஆம் ஆண்டு கல்வி யாத்திரை இன்று தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிக் கொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேந்திரன் கந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கட்டொழுக்கம், சமய நம்பிக்கை கூடிய கல்வியே ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று அவர் சொன்னார்.
அவ்வெற்றியின் மூலம் இந்திய சமூகம் முன்னேற்றம் அடையும் என்ற ஆழமான நம்பிக்கையோடு ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த 43 ஆண்டுகளாக கல்விப் புரட்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.

அவ்வகையில், ஸ்ரீ முருகன் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 31ஆவது ஆண்டுக் கல்விக் யாத்திரையில் கலந்துகொள்ளும் நோக்கில் இன்று காலை பத்துமலை திருத்தலத்தில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இந்த ஆண்டு கல்விக் யாத்திரை ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுநர் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் யாத்திரையாகும்.

அவரது இழப்பு ஆழ்ந்து உணரப்பட்டாலும், எந்த ஒரு குழந்தையும் தனித்து நடக்காது என்பதை உறுதிசெய்ய அவர் முன்னெடுத்து நீடித்த பணி தொடர்ந்து வாழ்கிறது என்று அவர் சொன்னார்.

