
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 3-
மித்ராவுக்கு ஒதுக்கப்படும் 100 மில்லியன் அதாவது பத்து கோடி வெள்ளி இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்து கோடி வெள்ளியில் 60 விழுக்காடு தொகை (6 கோடி) கல்வி , வீடு, வியாபாரம் துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மித்ரா மூலம் நிதி வழங்கப்பட வேண்டும்.
தந்தை ஒருவர் இறந்து விட்டால் மாணவரின் கல்வி பாதிக்கப்படும்.
இந்த மாணவரின் கல்வி பாதிக்கப்படாமல் மித்ரா கைகொடுக்க வேண்டும்.
அதைப்போல் வியாபாரம் செய்யும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா உதவ வேண்டும்.
அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களுக்கு 40 விழுக்காடு தொகை ஒதுக்கப்பட வேண்டும்.
ஒரு திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு நான்கு லட்சம் வெள்ளி ஒதுக்கினால் அது சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை.
சமுதாயம் நன்மை பயக்கும் வகையில் மித்ரா நிதி சென்றடைய வேண்டும் என்று அவர் சொன்னார்.
பிபிபி கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

