

புத்ராஜெயா:
நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை இனியும் மூடி மறைப்பது மடானி கொள்கைக்கு பொருந்தாது.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பான வழக்கிற்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூட்டரசு நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானும் மலேசிய மக்கள் சக்தி கட்சியினரும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தோம்.
சட்டத்துறை தலைவரின் மேல்முறையீட்டை நிராகரித்துடன் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவுக்கான மனு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த் தீர்ப்பு டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
காரணம் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டு காவல உத்தரவு வழங்கப்பட்டது என்று அனைவரும் நம்புகின்றனர்.
தற்போது கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த விவகாரம் மீண்டும் தெளிவாகி உள்ளது.
ஆக இந்த வீட்டு காவல் உத்தரவை இனியும் மூடி மறைக்காமல் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
இனியும் நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கக் கூடாது.
குறிப்பாக மாட்சிமை தங்கிய மாமன்னருக்கும் ஆட்சியாளர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என டத்தோஶ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

