வழக்கறிர் ம.மதியழகனின் “வழக்குகளில் என் பயணம்” நூல் வெளியீடு காண்கிறது.

ஈப்போ, ஆக. 13: பேராக் தமிழர் திருநாள் இயக்கத்தின் ஏற்பாட்டில் வரும் 23.8.2025( சனிக்கிழமை), மாலை மணி 4.30 க்கு ஈப்போ புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் ( சுங்கை பாரி வழி) வழக்கறிஞர் ம.மதியழகனின் ” வழக்குகளில் என் பயணம்” நூல் வெளியீடு செய்யப்படவுள்ளதாக நூலாசிரியர் வழக்கறிஞர் ம. மதியழகன் கூறினார்.

இந்நிகழ்வை முன்னிலை செய்து நூலை வெளியீடு செயகிறார் மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம்.குலசேகரன்.
இந்நிகழ்விற்கு வருகையளித்த அனைவருக்கும் இந்நூல் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்நூலை ஆய்வு செய்து, நூலை அறிமுகம் செய்கிறார் பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து ஆய்வு செய்த கெடாவின் வழக்கறிஞரான டத்தோ வி.நடராஜா என்பதனை அவர் தெரிவித்தார்.

கடந்த 40 வருடங்களாக வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, இதன் வாயிலாக இந்திய சமூகத்தினர் இந்நாட்டில் சட்ட அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்க்காக இந்நூல் வெளியீடு செய்வதாக அவர் சொன்னார்.

இந்திய சமூகத்தினரின் அலட்சிய போக்கால் சட்ட விவகாரங்களில் பல வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இந்திய வாழ் மக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles