
சொஸ்மா எனும் கொடுங்கோல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியிருப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டார்.
நாட்டில் ஆட்சி செய்வது எந்த அரசாங்கமாக இருந்தாலும் இந்த கொடுங்கோல் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்.
பொதுத் தேர்தலில் சொஸ்மா சட்டத்தை ரத்து செய்வோம் என்று பக்கத்தான் ஹரப்பான் கூறியது.
இப்போது தேசிய முன்னணியுடன் அரசாங்கத்தை அமைத்த பின்னர் சொஸ்மா விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு தெளிவாக உறுதியாக இல்லை.
சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டையும் அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்

